• Dec 26 2024

உடம்பு ரப்பர் மாதிரி வளையுதே.. தலைகீழாக தொங்கிய ஆண்ட்ரியா.. வைரல் வீடியோ..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக தொங்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, சரத்குமார் நடித்த ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் ’ஆயிரத்தில் ஒருவன்’ ’மங்காத்தா’ ’சகுனி’ ’விஸ்வரூபம்’ ’என்றென்றும் புன்னகை’ ’அரண்மனை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்த அவர் தற்போது ’மாஸ்க்’ ’பிசாசு 2’ உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி, நடிகை மட்டுமின்றி ஆண்ட்ரியா டப்பிங் கலைஞராகவும் உள்ளார் என்பதும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் அவர் கலந்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ஆண்ட்ரியா சற்றுமுன் தலைகீழாக பேலன்ஸ் செய்து யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகிறது.

’தி ரியல் யோகா அக்கா’ என்றும் ’எனது கனவு தேவதை’ என்றும் ’மை பேபி’ என்றும் ’உடம்பு ரப்பர் போல் வளையுதே, கவனமாக யோகா செய்யுங்கள்’ என்றும் பல்வேறு விதமான கமெண்ட்ஸ் இந்த வீடியோவுக்கு பதிவாகி வருகிறது.



Advertisement

Advertisement