• Apr 23 2026

யாருக்கும் தீங்கு நினைக்காத தங்கமான மனசு! - விஜய் குறித்து நடிகை கெளசல்யா ஓபன்டாக்.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

நடிகரும் தற்போது அரசியல் தலைவருமான விஜய் குறித்து நடிகை கெளசல்யா பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சினிமாவை விட்டு விலகி ‘தவெக’ கட்சியின் மூலம் அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வரும் விஜய்யின் மனிதநேய குணங்களை அவர் பாராட்டியுள்ளார்.


அவர் அளித்த பேட்டியில், “யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு நல்ல மனசுடையவர் தான் விஜய். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் என்ன சொன்னாலும் அதை முழுமையாக மதித்து கேட்டு செயல்படுவார். அப்போது அவர் ஒரு நடிகராக இருந்தார். இன்று அரசியலுக்கு சென்றாலும், அவரின் அந்த எளிமையும், பணிவும் எந்த விதத்திலும் மாறவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்யின் ரசிகர் வலிமை குறித்து பேசும்போது, “அவரின் ரசிகர்கள் பலத்தை பார்க்கும்போது உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. அவர்களுடைய ஆதரவு தான் விஜய்யின் மிகப்பெரிய பலம்.” என்றும் கூறியுள்ளார்.

கெளசல்யாவின் இந்த கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த பேட்டியை பகிர்ந்து, விஜய்யின் தனிப்பட்ட குணங்களை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement