• Dec 26 2024

மூளை அறுவை சிகிச்சை செய்த பிரபல நடிகை.. பரிதாபமாக உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கடந்த சில நாட்களுக்கு முன் மூளை அறுவை சிகிச்சை செய்த நிலையில் திடீரென அவர் உடல் நலக்குறைவால் காலமானதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மற்றும் மாடல் அழகி ரிஷ்டா லபோனி ஷிமானா என்பவர் பாலிவுட்டில் சில படங்கள் நடித்து வந்தார் என்பதும் குறிப்பாக ’லக்ஸ் சேனல் ஐ சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் துணை நடிகையாக நடித்து கொண்டிருந்த அவர் பல சீரியல்களிலும் நடித்தார் என்பதும் அதன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாடகர் பர்வேஸ் சசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் கணவரை பிரிந்து விட்டார்.

இந்த நிலையில் தனது தாய் வீடான பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்த ஷிமானாவுக்கு திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவரை சோதனை செய்த போது மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் இதனை அடுத்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை முடிந்த போதிலும் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் பரிதாபமாக காலமானதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அவரது சகோதரர் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் 39 வயதில் பிரபல நடிகை ஷிமானா காலமானதை அடுத்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement