• Dec 27 2024

நடிகை சங்கீதா கழுத்தில் இரண்டு தாலி..! ஏன் தெரியுமா? ரகசியத்தை அம்பலமாக்கிய மேக்கப் ஆர்டிஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நெல்சன் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இப்படத்தில் இவருடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.

அதன் பின்னர் இவருக்கு A1 மற்றும் டாக்டர் திரைப்படங்கள் இன்னும் அதிக அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து பீஸ்ட், ஜெயிலர், DD Returns போன்ற படங்களில் நடித்து வந்தார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி பிரபல சீரியல் நடிகை சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். சங்கீதா திருமகள் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி நடிகை சங்கீதா கழுத்தில் இரண்டு தாலி அணிந்துள்ளார். இதன் ரகசியம் குறித்து அவருடைய திருமணத்திற்கு மேக்கப் செய்த பெண் சில தகவல்களை கூறியிருக்கிறார். அதன்படி மேலும் அவர் கூறுகையில்,

அதில், 'இருவரும் பிளான் செய்து திருமணம் செய்யவில்லை. அவருக்கு மைசூரில் படப்பிடிப்பு இருந்ததால் அந்த இடைவெளியில் தான் திருமணம் நடந்தது.

ரெடின் கிறிஸ்தவர் என்பதால் அந்த தாலியும், சங்கீதா இந்து என்பதால் அந்த தாலியும் சங்கீதா கலுத்தில் அணிந்து இருந்தார். இருமுறை படி திருமணம் நடைபெற்றதாகவும் முதலில் இந்து கோவிலுக்கு சென்றும், பிறகு சர்ச்சில் வைத்தும் இரண்டு முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது.

சங்கீதா திருமண புகைப்படங்களை டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். பிறகு தான் இவர்களுடைய திருமண விஷயம் பலருக்கும் தெரிந்தது' என்றார்.

Advertisement

Advertisement