• Dec 26 2024

இவ்வளவு மெதுவா நியூஸ் போடுறீங்களே.. ஊடகத்தில் வெளியான புகைப்படத்தை கிண்டல் செய்த சுனைனா..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை சுனைனா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை ஊடகம் ஒன்று பதிவு செய்த நிலையில் அந்த ஊடகத்தை கிண்டல் செய்த சுனைனா ’இவ்வளவு மெதுவாக நியூஸ் போட்டு இருக்கின்றீர்களே’ என்று கேலி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் ’காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுனைனா அதன்பிறகு ’மாசிலாமணி’ ’வம்சம்’ ’திருத்தணி’ ’நீர்ப்பறவை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் விஜய் நடித்த ’தெறி’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் என்பதும் தெரிந்தது.
மேலும் கடந்த ஆண்டு வெளியான ’ரெஜினா’ திரைப்படத்தில் நடித்த சுனைனா தற்போது இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான ’இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார் என்பதும் அவரது கேரக்டருக்கு நல்ல விமர்சனங்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் தான் நடிக்கும் திரைப்படங்கள், சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் மற்றும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் சுனைனா, நேற்று ஊடகம் ஒன்று வெளியிட்ட பதிவை கிண்டல் செய்துள்ளார். அந்த பதிவில் சுனைனா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்ட நிலையில் இந்த செய்திக்கு பதிலடி கொடுத்த சுனைனா ’கடந்த ஆண்டு வெளியான செய்தியை இந்த ஆண்டு போட்டிருக்கிறீர்கள், எவ்வளவு மெதுவாக உங்கள் செய்தி கொடுக்கும் வேகம் இருக்கிறது, தற்போது நான் நலமாக இருக்கிறேன், வேண்டுமென்றால் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வரும் ’இன்ஸ்பெக்டர் ரிஷி’ பார்த்து செக் செய்து கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

ஊடகத்தை கிண்டல் செய்துள்ள சுனைனாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்களும் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement