• Jul 23 2025

அன்று நடிகர், நடிகைகளை அலறவிட்டவர்.. இன்று அரசியல் கட்சியின் தலைவர்.. யார் இந்த ஆனந்தன்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர், நடிகைகளை நீதிமன்றத்திற்கு வரவழைத்து அலறவிட்டவர் தான் இன்று அரசியல் கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த பதவிக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பல திரை உலக பிரபலங்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உள்ளார் என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது.

குறிப்பாக நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது மனைவி கிரகலட்சுமி வழக்கை இவர் தான் ஏற்று நடத்தியதாகவும், பிரசாந்துக்கு நியாயம் கிடைக்க திறமையாக வாதாடியதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் பிரகாஷ்ராஜ் -  லலிதா குமாரி தம்பதிகளின் விவாகரத்து வழக்கு, பிரபுதேவா - ரமலத் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு ஆகியவற்றிலும் வாதாடினார் என்பதும் ரம்லத் மற்றும் லலித குமாரி ஆகிய இருவருக்குமே இவர் நியாயம் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கறிஞர் ஆனந்தனை பொறுத்தவரை பணத்துக்காகவோ அல்லது மிரட்டலுக்காகவோ வாதிடுவதில்லை என்றும் நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்பதை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக மட்டுமே வாதாடுவார் என்றும் பணம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் கூறப்படுகிறது.

நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் மோகன் சர்மா வீட்டை விற்ற வழக்கு, நடிகை வடிவுக்கரசியின் வழக்கு என பல திரையுலக பிரபலங்களின் வழக்குகளை இவர் தான் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. மிகவும் திறமையான வக்கீல் என்ற பெயர் எடுத்த ஆனந்தன் தற்போது ஒரு தேசிய கட்சியின் தமிழக தலைவராகி இருக்கும் நிலையில் அந்த கட்சியின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement