• Oct 26 2024

’ஜெயிலர்’ ‘அரண்மனை 4’ அடுத்து இன்னொரு படத்தில் தமன்னாவின் குத்துப்பாடல்.. சொக்க வைக்கும் வீடியோ

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!


சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் பேட்டி ஒன்றில் ஒரு படத்தில் கதை தேவையில்லை, திரைக்கதை தேவையில்லை, தமன்னாவின் குத்து பாட்டு இருந்தால் போதும், அந்த படம் ஓடிவிடும் என்று விளையாட்டாக கூறினார்.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு தமன்னாவின் பாடலும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் பாலிவுட் திரைப்படமான ’ஸ்ட்ரீட் 2’ என்ற திரைப்படத்தில் தமன்னா சூப்பர் குத்து பாட்டு ஒன்றில் நடனமாடி உள்ளார். இந்த பாடலின் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் தமன்னா வெளியிட்டுள்ளதை அடுத்து ‘ஜெயிலர்’ பாடலை தூக்கி சாப்பிடும் அளவிற்கு செம கிளாமராக நடனமாடியுள்ளார்.

இந்த பாடலின் வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. மொத்தத்தில் இந்த படமும் தமன்னாவுக்காக மிகப்பெரிய வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement