• Dec 26 2024

அஜித் கிட்ட Dedication சுத்தமாக கிடையாது,இது மட்டும் தான் அவர்கிட்ட இருக்கு- சர்ச்சையைக் கிளப்பிய நடிகர் பப்லு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரங்களிலும், குணசித்திர வேடத்திலும் நடித்து பிரபலமான பப்லு, பட வாய்ப்புகள் குறைந்த போது அதிரடியாக சீரியலில் கால் பதித்தார். 

இவர் நடித்த 'கண்ணான கண்ணே' சீரியல், சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்தாலும் மற்றொருபுறம் பிஸினஸிலும் கலக்கி கொண்டிருக்கும் இவர், சென்னையில் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றை நடத்தி வருவது மட்டும் இன்றி, மலேசியாவிலும் பிஸ்னஸ் செய்து வருகிறார்.


இவர் ஷீத்தல் என்ற மலேசியப் பெண்ணைக் காதலித்து வந்ததோடு அவருடன் லிவிங் லைப்பில் வாழ்ந்தும் வந்தார்.சமூக வலைத்தளத்தில் ஹாட் ஜோடியாக இருந்த இருவரும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக  விட்டதாக தகவல்கள் வெளியானது . இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிடவில்லை.

மேலும் பல்வேறு சேனல்களில் பேட்டியளித்து வரும் பப்லு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை,அது என்னுடைய தனிப்பட்ட விசயம் என்றும் சூசகமாக சொல்லி வருகின்றார். அத்தோடு நடிகர் அஜித் குறித்தும் ஒரு தகவலைக் கூறியுள்ளார்.


அதாவது நடிகர் அஜித்துக்கு டெடிகேஷன் கிடையாது,ஷுட்டிங் ஸ்பாட்டில் கூட அதிக நேரம் பிரியாணி தான் சமைச்சிட்டு இருப்பாரு, அவருடைய வெற்றிக்கு அழகு தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement