• Dec 26 2024

அப்பா ஞாபகம் வந்து திடீரென அழுத அஜித்.. இணையத்தில் வைரலாகும் சோக வீடியோ..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


நடிகர் அஜித் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற போது திடீரென அப்பா ஞாபகம் வந்து கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த நிலையில் அஜித், விஜய் உள்பட பல சினிமா பிரபலங்கள் வாக்களித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அஜித் முதல் ஆளாக காலை 7 மணிக்கு தனது ஜனநாயக கடமையை ஆற்ற வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் என்பதும் அவர் வாக்களித்த போது எடுத்த புகைப்படம் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித் வாக்களிக்க வரிசையில் நின்ற போது திடீரென அப்பாவை நினைத்து கண் கலங்கியதாகவும் ஒரு கட்டத்தில் அவரது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் இதுவரை அனைத்து தேர்தலிலும் வாக்களிக்க வரும்போது அவர் தனது அப்பாவையும் அழைத்து வருவார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2019 ஆம் ஆண்டு கூட  மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க அஜித் தனது தந்தையுடன் வந்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் வயது முதிர்வு காரணமாக காலமான நிலையில் இந்த முறை அவர் தந்தையுடன் இல்லாமல் தனியாக வந்திருப்பதை நினைத்துதான் அவர் கண் கலங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement