நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இயக்கி நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை அடுத்து தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்கள் கைவசம் உள்ளது. இந்நிலையில் யோகிபாபு 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
யோகி பாபுவுடன் நடிகர் செந்தில் நடித்துள்ளார். இப்படத்தை 'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார்.இப்படத்தின் முதல் பாடலான 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் டீசர் நாளை ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது வருங்கால CM - oda songu😎😎😎🙏🙏🙏 pic.twitter.com/0SM8RvEljm
Listen News!