• Oct 05 2025

தீபாவளிக்கு ரிலீஸாகும் 3 திரைப்படங்கள்.. கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்.! வெல்வது யார்.?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தீபாவளி, தமிழ் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. ஒளியின் திருநாளாக மட்டுமல்ல, திரையுலகத்திலும் இது மிகப்பெரும் திருவிழா. வருடந்தோறும் பெரிய தயாரிப்பாளர்களும், பிரபல நட்சத்திரங்களும் இந்த நாளை குறிவைத்து படங்களை வெளியிடுவது வழக்கமாகி விட்டது.


2025-ஆம் ஆண்டு தீபாவளி, அதற்கேற்ப மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வர இருக்கிறது. தற்போது, கோலிவுட்டில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள முக்கியமான மூன்று திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் படமாக, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய படம் “பைசன்”. இதனை மாரி செல்வராஜ் இயக்குகின்றார். இரண்டாவது படமாக வெளியாவதை உறுதி செய்துள்ளது "Dude". இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தது, அதில் பிரதீப் ரங்கநாதனின் லுக் அனைவரையும் கவர்ந்திருந்தது.


மூன்றாவது படம், மிகப்பெரிய பட்ஜெட்டுடன் ரெடியான படம் தான் “டீசல்”. இப்படம் ஆக்சன் மற்றும் நகைச்சுவை கலந்த வகையில் உருவாகியுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று படங்களும் வெவ்வேறு கோணத்தில் வந்தாலும், ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்பது உறுதி.

Advertisement

Advertisement