• Dec 25 2024

சஞ்சீவுக்கு வேறு நடிகையுடன் நடந்த திருமணம்... சோகமாக வாழ்த்துக்கள் சொன்ன ஆல்யா மானசா...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

ராஜா ராணி சீரியலில் ஜோடிகளாக நடித்து பின் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக மாறியவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இந்த காதல் ஜோடிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் எனும் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 


அதே போல் பிரபல சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். கயல் சீரியலில் தற்போதைய கதைகளம்படி சஞ்சீவ் - சைத்ரா ரெட்டி இருவரும் பல போராட்டங்களுக்கு பின் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், சஞ்சீவ் - சைத்ரா திருமணம் சீரியலில் நல்லபடியாக முடிந்த முடிந்துள்ளது. 


சஞ்சீவின் மனைவி ஆல்யா மானசா, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'உங்கள் இருவரும் மனமார்ந்த சீரியல் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்' என கிண்டல் செய்வது போல் கூறி பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement