• Dec 26 2024

இத்தாலியில் நடைபெற்று முடிந்த எமி ஜாக்சனின் 2வது திருமணம்! வைரல் போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான மதராசபட்டினத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை எமி ஜாக்சன். அதன் பிறகு  தாண்டவம், கெத்து, எந்திரன், ஐ , மிஷன் சாப்டர் 1  உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

இவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமான எமி ஜாக்சன், ஜார்ஜ் பன்னாயுட்டு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு அவருடன் வாழ்ந்த நிலையில், சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்டிருந்தார். அதன் பின்பு அவர்களுக்கு மகன் ஒருவரும் பிறந்தார். ஆனால் அதன் பின்பு இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இதை அடுத்து இங்கிலாந்து நடிகரான எட்வெஸ்ட் விக்குடன் டேட்டிங்கில் இருந்து வந்தார் எமி ஜாக்சன். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.


இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பப்களுக்கு அடிக்கடி இரவு நேர பார்டிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த எமி  ஜாக்சன் தற்போது அதற்கு தயாராகியுள்ளார்.

இதன் காரணத்தினால் இரண்டு குடும்பத்தினரும் பிரைவேட் ஜெட்டில் லண்டனில் இருந்து புறப்பட்டு உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போது எமி ஜாக்சனுக்கும் எட்வெஸ்ட் விக்குடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளதாம். இவர்களுடைய திருமணம் இத்தாலியில் நடைபெற்றதாக தற்போது புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதை பார்த்த பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement