• Dec 26 2024

மஞ்சு வாரியர் நடித்த ஃபுட்டேஜ் படம் மண்ணைக் கவ்வியதா? வெளியான விமர்சனம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் தான் ஃபுட்டேஜ். இந்த படத்தில் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக்  ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை மூவி பாக்கெட் பால் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என்கோ என்டர்டெயின்மென்ட்ன் கீழ் பினீஷ் சந்திரன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் இருந்து அண்மையில் போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டரில் நாயர் விசாத்தை கதாநாயகி கட்டிப் பிடிப்பது போல இருந்தது . இதை பார்த்த பலரும் அது மஞ்சுவாரியர் என்றும் இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி கேரக்டரில் நடிக்கின்றாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

ஆனாலும் இறுதியில் அது மஞ்சு வாரியர் இல்லை. அது காயத்ரி அசோக் என தெரிய வந்தது. இந்தப் படம் ஒரு கிரைம் திரில்லர் படமாகும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் youtube தம்பதிகள் தங்களின் கட்டிடத்தில் நடக்கும் மர்மங்களை பின்தொடர்ந்து செல்கின்றார்கள். இதன்போது அங்கு வசிக்கும் மர்மமான பெண்ணான மஞ்சு வாரியரை பின்தொடர்கின்றார்கள். அதன் பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் மீதி கதை.


இதில் மர்ம பெண்ணாக அறிமுகமான மஞ்சு வாரியர் இறுதிவரையில் மர்மமாகவே உள்ளார். அவரது கேரக்டர் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. மேலும் அவருக்கு ஒரு வசனமும் இல்லை. இதனால் அவர் ஊமையாக இருக்கின்றாரா அல்லது கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றாளா என்பது படம் பார்ப்பவர்களுக்கே தெரியவில்லை.

அத்துடன் ஆபத்தான நேரத்தில் கூட அந்த youtube ஜோடிகள் கேமராவை விடாதது அபத்தமாக இருந்தது. இயக்குனர் இந்தப் படத்தை கோட்டை விட்டுட்டார் என்று இணையவாசிகள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement