• Dec 26 2024

’மஞ்சும்மெல் பாய்ஸ்’ பிரபலத்தை மணக்கிறார் ‘பீஸ்ட்’ நடிகை அபர்ணா தாஸ்.. தேதி அறிவிப்பு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த அபர்ணா தாஸ், ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தில் நடித்த பிரபலம் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

மலையாள நடிகை அபர்ணாதாஸ் 2018 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நிலையில் 2019 ஆம் ஆண்டு அவர் விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் தன்னுடைய பெயரான அபர்ணா என்ற கேரக்டரில் நடித்தார்.  அதன் பிறகு கவின் நடித்த ’டாடா’ என்ற படத்தில் நடித்தார் என்பதும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய புகழையும் பெயரையும் பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 



இதையடுத்து தற்போது அவர் இரண்டு மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’  படத்தில் நடித்த தீபக் என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும் இவர்களது திருமணம் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒரு காதல் திருமணம் என்றாலும் இரு வீட்டு சம்மதத்துடன் நடைபெறும் திருமணம் என்றும் இந்த திருமணத்திற்கு தமிழ் மலையாள திரை உலகினர் பலர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. 

அபர்ணா தாஸ் தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தை முடித்துவிட்டு அவர் திரை உலகில் இருந்து விலகி விடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தீபக்  நான்கு படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பிஸியான நடிகராக உள்ளார் என்பதும் இவருக்கு இன்னும் அதிக படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement