• Apr 17 2026

’தளபதி 69’ நான் தான் தயாரிப்பாளர்.. மணிரத்னம் தான் இயக்குனர்.. திடீரென குண்டை தூக்கி போட்ட அர்ச்சனா கல்பாத்தி..

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 69’ திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்ற கேள்வி மட்டுமே தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம் தொகுப்பாளினி ஆர்ஜே அர்ச்சனா சில கேள்விகளை கேட்டார்.  

‘தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்று அவரிடம் கேட்கப்பட்ட போது எனக்கு இயக்குனர் யார் என்று தெரியும், ஆனால் அதை சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து ஆர்ஜே அர்ச்சனா அது எப்படி எங்களுக்கு சொல்லாமல் இருக்கலாம் என்று கேட்டபோது ’இல்லை சும்மா சொன்னேன், யார் இயக்குனர் என்பது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை என்று கூறி சமாளித்தார். 

அதன் பிறகு ’தளபதி 69’ திரைப்படத்தை யார் இயக்கினால் நல்லது என்று ஒரு விஜய் ரசிகையாக நீங்கள் விரும்புகிறீர்கள்’ என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்தால் அர்ச்சனா கல்பாத்தி ’மணிரத்னம் சார் இயக்கினால் நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்தார். 

இதனை அடுத்து ’அந்த படத்தை யார் தயாரிப்பார் யாராக இருக்க வேண்டும்’ என்று கேட்டபோது ‘நான் தான் அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றும் கூறினார். இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றாலும் அர்ச்சனா கல்பாத்தி அந்த சினிமா விழாவில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.


Advertisement

Advertisement