• Dec 25 2024

திடீரென மன்னிப்பு கேட்ட ‘கோட்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.. என்ன காரணம்?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் திடீரென ’சாரி’ என மன்னிப்பை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்று தனது சமூக வலைதள பக்கத்தில் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய படம் ஒன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் காரணமாக தாமதம் ஆகிறது என்றும் கூறியிருந்தது.

இந்த பதிவு ’கோட்’ திரைப்படத்தை மறைமுகமாக கூறியதாக புரிந்து கொண்ட அர்ச்சனா கல்பாத்தி ’கண்டிப்பாக இந்த தகவல் உண்மை அல்ல, நாங்கள் 24 மணி நேரமும் இந்த படத்தின் பணிகளை செய்து வருகிறோம், எனவே தயவு செய்து நெகட்டிவ் மற்றும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அவர் மீண்டும் ’இந்த பதிவில் ’கோட்’ படம் என குறிப்பிடவில்லை, அதை நான் கவனிக்கவில்லை, மன்னிக்கவும். ஆனால் அதே நேரத்தில் நாங்கள் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement