• Dec 26 2024

14 வயதில் நடிகையாகும் ஆசையில் ஊசி போட்டன்.. ஆனா அதன் விளைவு..? சிறகடிக்க ஆசை நடிகையின் சோகக்கதை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மாவின் தோழி பார்வதி கேரக்டரில் நடிப்பவர் நடிகை பாக்கியஸ்ரீ நடித்து வருகிறார். 

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் காணப்படுகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து உள்ளனர். 

அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மா, அதாவது விஜயாவின் தோழி பார்வதி ஆக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பெயர் பாக்கியஸ்ரீ.


இவர் தமிழில் தேவியின் திருவிளையாடல் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அந்த திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து 80 காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், அவர் அண்மையில் வழங்கிய பேட்டியொன்றில் தான் சினிமாத்துறையில் கடந்துவந்த கடினமான பாதை குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

'1982ல் சினிமாவில் அறிமுகமானேன். சின்ன வயசிலிருந்தே நடிகை ஸ்ரீதேவியை பார்த்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அப்படி என் உறவினர் மூலம் மலையாள படத்தில் நான் அறிமுகமானேன். 

அதைத் தொடர்ந்து தேவியின் திருவிளையாடல் என்ற படத்தில் நடிக்கும் போது, அந்த படம் தமிழிலும் வெளியாகியிருந்தது. மனோரமா, கே ஆர் விஜயா போன்றோரெல்லாம் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். 


எமக்கு அப்போ தாவணி கூட ஒழுங்கா கட்ட தெரியாது. மனோரமா தான் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். 14 வயதில் சினிமாவுக்கு வந்து என் உடம்பை கொஞ்சம் குண்டாக்குவதற்காக ஊசி எல்லாம் போட்டன். 

காரணம் அப்போதெல்லாம் நடிகைகள் கொஞ்சம் குண்டாகத்தான் இருப்பார்கள். அப்படி இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும். அதற்காகத்தான் நானும் என்னுடைய உடல் எடையை ஊசி போட்டு அதிகரித்தேன்.

அதற்கு பிறகு சில காலங்களிலையே திருமணம் செய்துவிட்டேன். ஆனால் நான் ஊசி போட்டதன் விளைவு கர்ப்ப காலத்தில் தெரிந்தது. நான் புகழின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து விட்டேன். 

ஆனால் திரும்பி பார்த்தால் நாட்கள் செல்லாது மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து இப்போது நடிக்க வந்திருக்கிறேன். அதோட நான் ரஜினி சார் உடன் நடித்திருக்கிறேன்' என்றும் கூறியுள்ளார் பாக்யஸ்ரீ.


 


Advertisement

Advertisement