• Dec 27 2024

‘பாக்கியலட்சுமி’ நடிகர், ஹீரோவாக நடிக்கும் தொடர் முடிகிறதா? அவரே வெளியிட்ட தகவல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் இன்னொரு சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் 600 எபிசோடுகளுக்கு மேல் சென்ற அந்த சீரியல் தற்போது முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் செழியன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் ஆர்யன். இந்த தொடரில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’மீனாட்சி பொண்ணுங்க’ என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.



இந்த தொடரில் அவருக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் இந்த சீரியலில் முதலில் மோக்‌ஷிதா தான் நாயகியாக நடித்து வந்த நிலையில் அதன் பின் திடீரென அவர் விலகியதால் சௌந்தர்யா தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல் ’வீடு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அர்ச்சனாவும் இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரீரஞ்சனி இந்த தொடரில் நடத்தி வருகிறார்.

கிட்டத்தட்ட 600 எபிசோடுகளுக்கு மேல் ஜீ தமிழ் சேனலில் இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக ஆர்யன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரைவில் இந்த தொடர் முடிவடைய இருப்பதாக கூறியுள்ளதால் ரசிகர்கள் மிகவும் சோகமாக உள்ளனர்.

Advertisement

Advertisement