1998 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் தான் நடிகை வினுஷா தேவி. இவர் தனது பட்ட படைப்பை முடித்தவுடன் மாடலிங் துறையில் களமிறங்கினார். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கோடு இருந்த வினுஷாவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் N4 திரைப்படம்.
இந்த திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வினுஷா தேவி நடித்திருந்தார். அதன் பிறகு வினுஷா தேவிக்கு சின்னத் திரையில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் ஏற்கனவே ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக இவர் நடிக்க ஆரம்பித்தார். இதன் இரண்டாம் பாகத்திலும் வினுஷா தேவி நடித்திருந்தார். ஆனால் இந்த சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வந்தது.
இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களால் உருவ கேலி செய்யப்பட்டார் வினுஷா. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி அதற்குத் தகுந்த பதிலடியும் கொடுத்திருந்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பனி விழும் மலர் வனம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். அண்ணன் தங்கை மற்றும் அக்கா தம்பி ஆகிய நான்கு பேருக்கும் இடையில் இடம்பெற்ற திருமணம், அதனால் ஏற்பட்ட திருப்பங்கள் என சுவாரஸ்யமாக இந்த சீரியல் நகர்ந்து வருகின்றது.
இந்த நிலையில், தற்போது பனி விழும் மலர் வனம் சீரியலில் கழுத்தில் தாலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வினுஷா தேவி.
இதனை திடீரென பார்த்த ரசிகர்கள் வினுஷா தேவியின் கழுத்தில் மஞ்சள் தாலி இருப்பதை பார்த்து அதிர்ந்து போய்விட்டார்கள். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Listen News!