தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் பிரபு நூறுக்கும் அதிகமான படங்களில் நடித்து 80, 90ம் ஆண்டு காலப்பகுதிகளில் புகழின் உச்சத்தில் காணப்பட்டார்.
தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமாக காணப்பட்டார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த பிரபு தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுவுக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரிய வந்தது.
d_i_a
இதை அடுத்து சிறுநீரகத்தில் இருந்த கல்லை டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்கு மத்தியில் அகற்றி உள்ளார்கள். லேசர் சிகிச்சை மூலமே குறித்த கல் அகற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நடிகர் பிரபு மீண்டும் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் வீக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கான அறுவை சிகிச்சையும் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது அவருடைய உடல் நிலை சீராக இருந்ததாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்து இருந்தார்கள்..
இந்த நிலையில், நடிகர் பிரபு பூரண குணமடைந்து டிஸ்டார்ஜ் ஆகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!