• Dec 26 2024

மைக்கேல் மதன காம ராஜன் மாதிரி ஒரு படத்தை யாராவது நடிக்க முடியுமா? கமலை திட்டிய இசைஞானி!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருப்பவர்கள் தான் இசைஜானி இளையராஜா, நடிகர் கமல்ஹாசன். இவர்கள் தொடர்பில் தற்போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் ட்ரெண்டிங்கில் உள்ள படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த படம் மலையாள படம் என்றாலும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.

குணா குகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், கமல்ஹாசன் நடித்த 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடலும் இடம் பெற்று இருப்பது தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இதன் காரணமாக தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த குணா படமும் மீண்டும் வைரலாகி உள்ளது. அது தொடர்பான பேச்சுக்களும் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக உள்ளது.

இந்த நிலையில், பிரபல விருது வழங்கும் விழா ஒன்றில் இசைஞானி இளையராஜா மற்றும் கமல்ஹாசன் பங்கு கொள்ள, அவர்கள் இருவரையும் வைத்து சம்பவம் செய்துள்ளார் பார்த்திபன்.


அதாவது, குறித்த விழாவில் நடிகர் கமல்ஹாசனிடம், சார் நீங்க ராஜா சார பத்தி பாராட்டி ஒரு வார்த்தை கூட சொல்ல கூடாது. ஆனா திட்டி பத்து வார்த்தை பேசணும் என்றால் எப்படி திட்டுவீங்க என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு கமல்ஹாசன், இசைஞானி கமல்ஹாசனின் ரசிகர். என்னை அவருடைய பல பாடல்களில் பாட வைத்திருக்கிறார். என்னை கவிதையும் எழுத வைத்துள்ளார். இதுக்கு மேல திட்டினா பல உண்மைகள் வெளியே வந்துடும் என கலகலப்பாக பேசி இருந்தார் கமல்.

இதையடுத்து இளையராஜாவும் நானும் உங்களை திட்டுகிறேன் என, மைக்கேல் மதன காம ராஜன் மாதிரி ஒரு படம் இனிமேல் யாராவது நடிக்க முடியுமா? இல்லை எடுக்க முடியுமா? அபூர்வ சகோதரர்கள் அது மாதிரி ஒரு படம் நடிக்க முடியுமா? எடுக்க முடியுமா? குணா... கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் அந்த மாதிரி படம் தான் எடுக்க முடியுமா என கமலை புகழ்ந்து தள்ளியுள்ளார் இசைஞானி.


Advertisement

Advertisement