• Dec 26 2024

ஓடாத படத்திற்கு சைனீஸ் தாத்தா, சிக்ஸ் பேக் தாத்தானு விளம்பரமா? லைகாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்பட த்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இந்தியன் 2 திரைப்படம் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளார்கள். ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இதனால் இந்த படத்தை பார்ப்பதை தவிருங்கள் என பலரும் சமூக வலைத்தளத்தில் கதறி வருகின்றார்கள்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா நிறுவனம் எப்படியாவது இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கமலஹாசனின் ஒவ்வொரு கெட்டப்பைபும் வைத்து ப்ரொமோட் பண்ணி வருகின்றார்கள்.

அதாவது சிக்ஸ் பேக் வைத்த இந்தியன் தாத்தா, தாய்வான் தாத்தா, சைனீஸ் தாத்தா என கமலஹாசன் நடித்த அவதாரங்களை வைத்து விளம்பரம் செய்து வருகின்றார்கள்.


இந்த படத்தில் தாய்வான் தாத்தாவாக கமலஹாசன் கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு விமான நிலையத்தில் வருவார். ஆனால் பாபி சிம்ஹா அசால்டாக அதை கண்டுபிடித்து விடுவார். அதனை சமீபத்தில் போஸ்டராக வெளியிட்டு லைகா நிறுவனம் ப்ரோமோஷன் செய்திருந்தது.

அதன் பின்பு இந்த படத்தில் இடம்பெற்ற பைட் ஒன்றில் இந்தியன் தாத்தா ஜாக்கிஜான் சண்டை போடுவது போல தொப்பையுடன் சண்டை போடுவார். ஆனால் திடீரென வர்மக்கலை மூலமாக சிக்ஸ் பேக் கொண்டு வந்து மிரட்டலாக சண்டை போட்டு இருப்பார். அந்த சீனையும் வைத்து லைகா நிறுவனம் ப்ரொமோட் செய்திருந்தது.

இவ்வாறு லைகா நிறுவனத்தின் ப்ரோமோஷன்களை பார்த்து ரசிகர்கள் ஓடாத படத்திற்கு விளம்பரம் எதற்கு என கேட்டு வருவதோடு வேட்டையன், விடாமுயற்சிக்கு அப்டேட்டை கொடுங்க என கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement