• Dec 27 2024

காமெடி நடிகர் சேசுவுக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவ மனையில் அவசர அனுமதி!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் நடிகர் சேசு. இவரது காமெடி, நடிப்புக்கு தனி இடமே உண்டு.

தமில் சினிமாவில் மட்டுமின்றி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியிலும் கலக்கி இருந்தார் சேசு.

அதாவது, லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் விதவிதமான தோற்றங்களில் வந்து வித்தியாசமான காமெடிகளை செய்து அனைவரையும் சிரிக்க வைத்து இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடன் சக காமெடியனாக நடித்த சந்தானத்துடன் திரையுலகிலும் ஒரு சில படங்களில் இணைந்து நடித்திருந்தார்.


அதன்படி சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த A1 படத்தில் இவர் குடித்துவிட்டு செய்கின்ற ரகளைகள் காமெடியாக மாறி இணையத்தில் மீம்ஸ்  மெட்டீரியலாகவும் வலம் வந்து கொண்டுள்ளது.

இவர் கூறிய, ஐயையோ.. அவரா.. அவர் பெரிய ஆளாச்சே.. எல்லாரும் பயப்படுவாங்க.. என்ற டயலாக் பலராலும் கவரப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் , நடிகர் சேசுவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

இதையறிந்த பலரும், அவர் உடல்நலம் தேறிவர பிராத்தனை செய்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement