• Dec 27 2024

ஆதாரமின்றி அவதூறு பரப்பியதாக பயில்வான், தமிழா பாண்டியன் மீது கமிஷனரிடம் புகார்! மன உளைச்சலில் கருணாஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜு, அண்மையில் நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் பற்றி அருவருக்கத்தக்க வகையில் அவதூறாக செய்தியாளர்கள் மத்தியில் பேசியிருந்தார். 

இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளை கிளப்ப, அவருக்கு  எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஏ.வி. ராஜுவின் இந்த பேச்சு பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து நடிகை திரிஷாவும் கண்டனத்தை பதிவு செய்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, மன்னிப்பு கேட்குமாறு பதிலடி கொடுத்தார். 


அதே போல் நடிகர் கருணாஸும் ஏ.வி. ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் செய்தார். 

இந்நிலையில்,  கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, யூடியூப் சேனலில் தன்னை பற்றி ஆதாரமின்றி அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக பயில்வான் ரங்கநாதன், தமிழா பாண்டியன் உள்ளிட்டோர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது புகார் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் இவ்வாறு புகார் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement