• Jan 04 2025

விடாமுயற்சிக்கு அஜித் கொடுத்த விமர்சனம்..? மகிழ் திருமேனி நெகிழ்ச்சி

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் பிரபல நடிகராக காணப்படும் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. அஜித் நடிப்பில் இறுதியாக படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த படங்கள் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா, பிக்பாஸ் பிரபலமான ஆரவ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.  

சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் இருந்து ஷூட்டிங் கிளிக்ஸ்  வெளியாகி இருந்தது. அதேபோல குட் பேட் அக்லி படத்திலும் அஜித் குமார் இளமையாக உள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.


இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி வழங்கிய பேட்டி ஒன்றில், விடாமுயற்சி படத்தை பார்த்த அஜித் இதுபோன்ற படங்களில் தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வழக்கமான மாஸ் பொழுதுபோக்கு படமாக மட்டுமில்லாமல் வலுவான கதைக்களம் கொண்ட படமாகவும் விடாமுயற்சி இருக்கும் என மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement