இசைஞானி இளையராஜா பற்றிய விமர்சனங்களுக்கு எதிராக பிரபல இசையமைப்பாளர் தேவிபிரசாத் கடுமையாக பதிலளித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இசை விழாவில் அவர், "இளையராஜா சாரைப் பற்றி யாராவது தவறாக பேசினால், நிச்சயமாக தாங்க முடியாது. அவர் தமிழுக்கே பெருமை மட்டுமல்ல, உலக இசைக்கே பெருமை. அவரைப் பற்றி யார் என்ன பேசினாலும், அதை தாங்கிக்கொள்ள யாருக்கும் இங்கே சகிப்புத்தன்மை இருக்காது" என்று கூறினார்.
இந்த விழாவில் தேவிபிரசாத், "இளையராஜாவின் இசை என்பது வெறும் பாடல்களல்ல, அது ஒரு உணர்வு. அவருடைய இசை நூற்றாண்டுகளாக மக்களை கவரும் வகையில் உள்ளது. அவரின் இசையை கேட்டுவிட்டு விமர்சனம் செய்ய நினைப்பவர்கள், இசையின் முக்கியத்துவத்தை உணரவேண்டும்" என்று கூறினார்.
இளையராஜா 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இவருடைய ஒவ்வொரு பாடலும் காலத்தால் அழியாத கலைப்பொருளாக மாறியுள்ளது என்றார்.மேலும் தேவிபிரசாத், "இளையராஜா அவர்களின் இசையை நாங்கள் எல்லோரும் கற்றுக் கொண்டோம். அவருடைய இசையால் எங்கள் வாழ்க்கையே உருவாகியது. அவரை யாரும் விமர்சிக்க முடியாது, அவருக்கு ஈடான இசையமைப்பாளர்கள் இன்று இல்லை" என்று உறுதியாக தெரிவித்தார்.
தேவிபிரசாத், "இளையராஜா ஒரு சாதாரண இசையமைப்பாளர் அல்ல, அவருக்கென தனி இடம் இருக்கிறது. அவரைப் போல் யாரும் இன்னும் பிறக்கவில்லை. அவரது இசையை மட்டுமே ரசிக்க வேண்டுமே தவிர அவரை தவறாக பேச யாருக்கும் உரிமை இல்லை!" என்று கூறினார். தேவிபிரசாத்தின் உரை, இளையராஜா ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் பெருமையும் அளித்துள்ளது.
Listen News!