• Mar 01 2025

என்னை கடைசிவரை ஏமாற்றிட்டாரு..! இமான் பற்றி பாடகி விஜயலட்சுமி ஓபன் டாக்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான குக்கூ படத்தில் இடம்பெற்ற 'கோடையில மழை போல' என்ற பாடல் மூலம் பாடகியாக காலடி எடுத்து வைத்தவர் தான் வைக்கம் விஜயலட்சுமி. இதை தொடர்ந்து அவர் பாடிய 'சொப்பன சுந்தரி நான் தானே' என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. 

இதைத்தொடர்ந்து பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி மிகவும் பிரபலம் ஆனார். மலையாளத்திலும் பல படங்களில் பாடி உள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. இவர் சற்று பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியாக காணப்படுகின்றார்.

இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயதார்த்தம் ஆனது. ஆனாலும் மாப்பிள்ளை போட்ட கண்டிஷன் தனக்கு செட் ஆகவில்லை என்று மறுத்தார். அதன் பின்பு 2018 ஆம் ஆண்டில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணத்தில் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள்.


எனினும் இவர்களுடைய இல்லற வாழ்க்கையும் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.  கணவருடன் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் வைக்கம் விஜயலட்சுமி. மேலும் அவர் டார்ச்சர் செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பிரபல  சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் தனக்கு இளைஜராஜா சார் கூடவும் ஏ. ஆர் ரகுமான் சார் கூடவும் வித்யா சார் கூடவும் பாடணும் என்று ஆசை இருக்கு என தெரிவித்து உள்ளார்.

மேலும், தன்னை பார்ப்பதற்காக யேசுதாஸ் சார், எம். ஜெயசந்திரன் சார், மலையாள டைரக்டர் கமல் சார் வந்ததாகவும் தெரிவித்தார்.

 மேலும் இறுதியில் இமான் சார் வருவதாக சொன்னார். ஆனால் அவர் இன்றுவரை வரவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement