• Dec 26 2024

ராயன் பட வெற்றியை கோவிலுக்கு சென்று கொண்டாடும் தனுஷ்! வைரல் போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி பாடகர் ஆகவும் இயக்குனராகவும் ஜொலித்து வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் திரை அரங்குகளில்  சக்கைப் போடு போட்டு வருகிறது.

ராயன் திரைப்படத்தில் தனுஷ் உடன் வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், சந்தீப் கிஷான், எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.


உலக அளவில் வசூல் வேட்டை நடத்தி வரும் ராயன் திரைப்படம் சாதனைகளை படைத்து வருகின்றது. இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் தனுஷ் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றாராம்.


அந்த வகையில் ஆடி கிருத்திகை தினமான இன்றைய தினம் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். கையில் ருத்ராட்ச மாலையை சுற்றிக்கொண்டு கடவுள் பக்தியோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


நடிகர் தனுஷ் உடன் அவரது மகன்களும் வந்திருந்ததோடு அவர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதமும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார் தனுஷ்.

Advertisement

Advertisement