• Apr 08 2025

யோகி பாபு பேயாக நடித்தாரா? வெளியானது TEENZ படத்தின் டீசர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன். வித்யாசமான கதைகளை கொண்ட படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டுமென்ற முனைப்பில் பார்த்திபன் செயல்பட்டு வருகிறார்.எனினும்  அதன்படி ஒத்த செருப்பு என்ற படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார்.

மேலும் இந்த படத்திற்கு விருதுகள் கிடைத்தாலும் ரசிகர்கள் பலரும் கொண்டாடவில்லை. அதன் பிறகு முதல் நான் லீனியர் படம் என்று இரவின் நிழல் படத்தை எடுத்தார். இந்த படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு ஒரு புறம் ஆதரவு கொடுத்தாலும், மற்றொருபுறம் எதிர்ப்பு கிளம்பியது.


அதுமட்டுமின்றி இந்த படமும் வசூலில் மிகப்பெரிய அடி வாங்கி இருந்தது. எனினும் இவ்வாறு அவருடைய வித்தியாசமான முயற்சிக்கு பல விருதுகள் கிடைத்தாலும் எந்த படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இது இயக்குநர் பார்த்திபனுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


இதை தொடர்ந்து தற்பொழுது TEENZ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்பார்த்திபன். அந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தாங்கள் பெரியவர்களாக மாறிவிட்டோம் என்பதை தங்களுடைய பெற்றோருக்கு உணர்த்தும் வகையில் செயல்பட எண்ணி, சில சிறுவர்கள் கூட்டம் தங்களது பள்ளியில் இருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சினைகளை திரில்லாக சொல்லி உள்ளார் பார்த்திபன்.

இதேவேளை, இந்த டீசரில் யோகி பாபு 'நான் செத்ததுல இருந்தே இங்க தான் இருக்கன் என பேசும் வசனம்' அவர் பேயாக நடித்துள்ளாரோ என வியக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement