• Dec 25 2024

தளபதி கன்னத்தில் அறைந்த நபர்... விஜய் அப்பா தான் காரணம்... ரகசியத்தை கூறிய இயக்குனர் மு. களஞ்சியம்

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் சந்தித்த அவமானங்கள் குறித்து இயக்குனர் மு. களஞ்சியம் பேசியுள்ளார். அதில், "சி. ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படப்பிடிப்பின் போது விஜய்க்கு தங்குவதற்கு தனியாக ஒரு அறை கூட கொடுக்கவில்லை.


அதன் காரணமாக விஜய் கோவம் அடைந்து அங்கு இருந்து சென்றுவிட்டார். இந்த தகவல் அறிந்து விஜய்யின் அப்பாவும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அதற்கு பின்னாடி வந்து கொண்டிருந்த விஜய்யின் கன்னத்தில் அறைந்து, உனக்கு தனியாக அறை தரவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம் நீ இன்னும் பெரிய இடத்திற்கு வர வேண்டும்.


உன்னிடம் கேட்காமல் உனக்கு அறை தரும் அளவிற்கு நீ வளர வேண்டும் அதை விட்டுவிட்டு கோவம் அடைவதால் எதுவும் மாறாது என்று கூறினார். இதை கேட்டு அனைவரும் வாய் அடைத்து நின்றோம். விஜய் இன்று தளபதியாக ஜொலிக்க முக்கிய காரணம் கண்டிப்பாக அவர் அப்பா தான்" என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement