• Dec 25 2024

சின்னத்திரையில் களமிறங்கும் மாளவிகா... எந்த நிகழ்ச்சிக்கு தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை மாளவிகா சின்னத்திரைக்கு வரப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் "வாள மீனுக்கும்.." என்ற பாடல் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனவர் நடிகை மாளவிகா.

1999ம் ஆண்டு உன்னை தேடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமான இவர் அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து டாப் நாயகியாக வந்தார். ஆனால் 2003ம் ஆண்டுகளுக்கு பிறகு அவர் நிறைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்தார்.


ஒருகட்டத்தில் அதாவது 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். சமூகவலை தளங்களில்  ஆக்டீவாக இருக்கும் இவர் இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிட்டு  வருகிறார். 


மாளவிகா இப்போது சூப்பர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை வர உள்ளார் அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வர இருக்கிறாராம்.

Advertisement

Advertisement