• Dec 25 2024

இந்த ஷோ பாத்துட்டுதானே வந்தீங்க? அர்ச்சனாவிற்கு அட்வைஸ் செய்து டயர்ட்டான பிக்பாஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகிவிட்டது. வழமையாக பிக் பாஸ் சீசனின் பாதியில் தான் புது போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே செல்வார்கள். ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு கூட விமர்சிக்கப்பட்டது. இதன் காரணமாக பிக் பாஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் 5 பேர் உள்ளே அனுப்பப்பட்டனர். 

இந்த நிலையில், உள்ளே சென்ற ஐந்து போட்டியாளர்களில் அர்ச்சனாவும் ஒருவராக உள்ளார். அவர் பங்குபற்றிய முதல் நாளே மாயா அவரை அழவைத்ததை நாம் அறிவோம். எனினும், சின்ன சின்ன விஷயங்களுக்கு அழுது புலம்பி தான் வீட்டை விட்டு வெளியே போக போறேன் என அடம் பிடிக்கிறார் அர்ச்சனா.


இந்த நிலையில், அர்ச்சனாவுக்கு அறிவுரை சொல்லியுள்ளார் பிக்பாஸ் தலைவர். 

அதன்படி, 'இங்க ரொம்ப பிரஷரா இருக்கு. நான் என்ன வேல பண்ணாலும் குறை சொல்றாங்க.ஆனா மத்தவங்கள்லாம் ஜாலியா இருக்காங்க. என்ன மட்டும் சோ்த்துக்கவே மாட்றாங்க' என புலம்பிக் கொட்டுகிறார் அர்ச்சனா.


இதற்கு, 'நீங்க வந்து நாலு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள வெளிய போறேன்னு சொன்னா எப்படி..? ஒவ்வொரு போட்டியாளரும் உங்களுக்கு எதிராகத்தான் விளையாடுவாங்க. வியூகம் அமைப்பாங்க. அதை நீங்க எதிர்கொள்றதும், இல்ல அதுக்குப் பலியாகறதும் உங்க கையிலதான் இருக்கு. மற்ற போட்டியாளர்களை நீங்க இம்ப்ரஸ் பண்ண வேண்டாம். மக்கள இம்ப்ரஸ் பண்ணா போதும். இந்த ஷோ பாத்துட்டுதானே வந்தீங்க? ஒருத்தர் அடிக்கடி கீழே விழலாம். ஆனால் எழுந்து நிக்கணும். இதெல்லாம் நிகழ்ச்சியோட பாகம். நான் அடிக்கடி மோட்டிவேட் பண்ணிட்டிருக்க முடியாது. நீங்கதான் தொடர்ந்து ஊக்கமா விளையாடனும்' என நல்ல அறிவுரையைச் சொல்லிக் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

இதேவேளை, இந்த வாரம் அன்ன பாரதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement