• Dec 26 2024

ராஜபோக வாழ்க்கை வாழும் நாக சைதன்யாவுக்கு எத்தனை கோடி சொத்து இருக்கு தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நாகர்ஜுனாவுக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவி லட்சுமியை விவாகரத்து செய்து நடிகை அமலாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருடன் தான் வாழ்ந்து வருகின்றார்.

நாகர்ஜுனாவுக்கு நாக சைதன்யா, நிகில் என இரு மகன்கள் உள்ளார்கள். அதில் மூத்த மகன்  நாக சைதன்யா முதல் மனைவியான லட்சுமிக்கு பிறந்தவர்.

நாகர்ஜுனா போலவே அவரது இரு மகன்களும் சினிமாவில் கலக்கி வருகின்றார்கள். 2009 ஆம் ஆண்டு வெளியான ஜோஷ் படத்தின் மூலம் நாக சைதன்யா சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக காணப்பட்டது.

அந்தப் படத்தினால் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின்பு இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்கள். இவர்களுடைய திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது.


திருமணத்திற்கு பிறகும் நாக சைதன்யாவும் சமந்தாவும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்கள். இவர்களது திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2021 ஆம் ஆண்டு இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாக சைதன்யா, அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இன்று குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் சிம்பிளாக நடைபெற உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், நாக  சைதன்யாவின் சொத்து மதிப்பு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது அவரின் தந்தை 3 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருப்பதால் சிறு வயதில் இருந்தே ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் நாக சைதன்யா.

தற்போது 154 கோடி சொத்துக்கு அதிபதியாக காணப்படுகின்றார். கார்கள் மீது பிரியம் கொண்ட இவர், அண்மையில் ரூ.3.5 கோடி மதிப்பு போர்ஸே 911 ஜிடி3 காரை வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement