• Dec 26 2024

வேட்டையனின் முதல் நாள் வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா? கலெக்சன் அள்ளுதே..!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த வேட்டையன் திரைப்படம் நேற்றைய திகதி பிரம்மாண்டமாக வெளியானது. இது சூப்பர் ஸ்டாரின் 170 ஆவது திரைப்படமாக காணப்படுகின்றது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தினை பாராட்டி வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் தமது நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை சொல்லித்தான் வருகின்றார்கள்.

வேட்டையன் படத்தின் கதையை பொருத்தவரையில் நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் குரலை திரையில் காட்டியுள்ளார்கள். குறிப்பாக ரஜினிகாந்த் மாஸ் ஹீரோவுக்கான கண்டென்ட்டாக காணப்படுகின்றார். வில்லனுக்கு எந்த வகையில் தண்டனையை பெற்றுக் கொடுக்கலாம் என நகர்த்திய விதமும் சிறப்பாக காணப்படுகின்றது.


இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மனசிலாயோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட  900க்கு மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளது.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் முதலாம் நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 30 கோடிகளில் இருந்து 35 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement