• Dec 27 2024

வாழை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? மாரிக்கு குவியும் இலாபங்கள்..

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய முதலாவது படத்திலேயே தனக்கு என தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன வாழை திரைப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இயக்குனர்கள் பலர் மாரி செல்வராஜை வெகுவாக பாராட்டி இருந்தார்கள்.


வாழைப்படத்தைப் பார்த்த இயக்குனர் பாலா மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்தங்களால் நனைத்து இருந்தார். அவர் மாரி செல்வராஜின் கரங்களை பற்றிக்கொண்டு அவருடன் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. அது போலவே நடிகர் சூரியும் மாரி செல்வராஜுக்கு முத்தங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

இந்த நிலையில், வாழைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலக்சன் மட்டும் 1.3 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை ஏற்கனவே ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்று விட்டதாகவும் தியேட்டர் வசூல் என்பது லாபத்தை ஈட்டி தரும் எனவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement