• Dec 26 2024

சந்தானத்தின் அடுத்த திரைப்படம் "வடக்குப்பட்டி ராமசாமி" ... ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சந்தானம் அவர்கள் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக பல படங்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் அவரின் ஹீரோ வருகைக்கும் ரசிகர்கள் ஆதரவு தந்தவண்ணம் உள்ளனர். இருப்பினும் அவரது படங்கள் பெரியளவில் வெற்றி தரவில்லை. 


பல படங்கள் நடித்திருந்த இவர் தற்போது "வடக்குப்பட்டி ராமசாமி" என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்த திரைப்படம் கார்த்திக் யோகி இயக்கத்தில் வரவிருக்கும் தமிழ் நகைச்சுவை நாடகமாகும். டிக்கிலோனா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சந்தானம் மீண்டும் இயக்குனர் கார்த்திக்குடன் இணைந்துள்ளார் . படத்தின் தலைப்பை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர்.


தற்போது வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதில் பிப்ரவரி 2-ம் தேதியன்று படம் திரைக்கு வரவுள்ளது.


Advertisement

Advertisement