• Dec 26 2024

கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிரடியாக வெளியான அறிவிப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான விஜய், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கோட். இந்த படம் கடந்த 5ம் தேதி வெளியானது.  

இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, ஜோகி பாபு, மோகன், பிரேம்ஜி உட்பட பலர்  முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இந்த படம் முதல் நாளிலேயே 126 கோடிகளை வசூலித்திருந்தது.

கோட் படத்தில் அதிகமான நடிகர்களை வைத்து கதை அமைத்த வெங்கட் பிரபு, தொழில்நுட்பத்திலும் அதிகமான கவனத்தை செலுத்தினார். ஆனால் படத்தின் கதை ரசிகர்களை கவர தவறி உள்ளது. இது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை தமிழில் மட்டுமே திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஓடி வருகின்றது. 

குறிப்பாக தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இந்த படம் பான் இந்திய படமாக வெளியானது. ஆனால் கேரளா, ஆந்திரா, கன்னடா, உள்ளிட மாவட்டங்களில் உள்ள ரசிகர்களை கவர தவறி உள்ளது.


மேலும் விஜய்யின் அடுத்த படமான  தளபதி 69 படத்தினை எச். வினோத் இயக்க உள்ளார். இதற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நடிகர் விஜய் சினிமாவில் விலகி அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளார்.

இந்த நிலையில், கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன்படி, கோட் படம் எதிர்வரும் 3ம் திகதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டர்களில் கல்லா கட்டிய இந்த படம் ஓடிடியில் சாதனை புரிகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement