• Dec 25 2024

நடிகை தமன்னாவிற்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா.?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இடம்பிடித்த தமன்னா, தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் அயன், பையா, வீரம், தேவி, ஜெயிலர் போன்ற வெற்றி படங்களில் நடித்த அவர், பல மொழிகளில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.


சமீபகாலமாக தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலித்து வருவதாக தகவல்கள் பரவினாலும், இதற்கான எந்த உறுதிப்படுத்தலும் அவரது தரப்பில் இருந்து இல்லை. இருவரும் பல நிகழ்ச்சிகளில் இணைந்து கலந்துகொண்டதால், இந்த கிசுகிசு அதிகம் பரவியது.


இந்நிலையில், தமன்னாவின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளிவந்துள்ளது. தமன்னா ஒரு பேட்டியில், "2025ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளேன்" என தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது வட்டார தகவல்களின் படி, அவரது திருமணம் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே நடக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தமன்னா தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement