• Dec 26 2024

குக் வித் கோமாளியில் டபுள் எலிமினேஷனா? வெறியேறியது யாரு யாரு தெரியுமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், பிக் பாஸ் போன்ற பல ஷோக்களுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அதுபோலவே இதில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து பல சர்ச்சைகள் எழும்பின. ஆனாலும் அவையெல்லாம் தாண்டி இன்றுவரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்கள் நடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளார்கள்.


அதாவது இந்த முறை எலிமினேஷன் சுற்றில் திவ்யா துரைசாமி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் காணப்பட்டார்கள். அவர்கள் சமைத்த உணவை சாப்பிட்ட நடுவர்கள் முதலில் திவ்யா துரைசாமி  எலிமினேஷன் செய்யப்பட்டதாக அறிவித்தார்கள்.

இதை தொடர்ந்து எல்லாரும் திவ்யாவுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்த பிறகு தாமு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார். அதாவது மற்றொரு போட்டியாளராக விடிவி கணேசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக அதிரடியாக அறிவித்தார்.

இரண்டு பேர் சமைத்து உணவும் சரியில்லை என்பதால் இந்த முடிவு எனக் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement