• Apr 08 2025

மாரடைப்பால் மரணமடைந்த கல்பனா பற்றி யாரும் அறிந்திடாத உண்மைகள்- இத்தனை படங்களில் நடித்திருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் தான் கல்பனா. இவர் நடிகை ஊர்வசியின் அக்காவும் ஆவார். இந்த நிலையில் இவர் குறித்து தான் இன்று தான் பார்க்கப் போகின்றோம்.

அதாவது 1965ம் ஆண்டு  அக்டோபர் 5ம் திகதி கல்பனா பிறந்தார்.இவர் மலையாளி ஆவார் கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அத்தோடு இவரது அப்பா ஒரு தியேட்டர் ஆட்டிஸ்டாவார். அம்மா விஜயலக்ஷ்மி . இவங்களுக்கு கலாரஞ்சினி, ஊர்வசி என்னும் இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். மேலும் இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே நடிக்க ஆரம்பித்தார்.


அதன் பின்னர் கதாநாயகியாகவும் குணச்சித்திரவேடங்களிலும் நடித்து வந்தார். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் நடித்திருக்கின்றார். பாக்கியராஜுடன் சின்ன வீடு கமல்ஹாசனுடன் சதிலீலாவதி என்னும் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.இது தவிர பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.


இவர் மலையாளம் தமிழைப்போல தெலுங்கு கன்னட மொழிகளிலும் நடித்திருக்கின்றார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.இவர் 2012ம் ஆண்டு தனிஞ்ச செஞ்சன் என்னும் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றார்.இதனைத் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


மேலும் இவர் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபல்யமானார். இயக்குநர் அனில்குமார் என்பவரைக் காதலித்து தீருமணம் செய்ததோடு இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கின்றனர்.இருப்பினும் கடந்த 2012ம் ஆண்டு அனில்குமார் கல்பனாவிடமிருந்த விவாகரத்துப் பெற்றார்.


விவாகரத்திற்குப் பின்னர் மனமுடைந்த கல்பனா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இறுதியாக கார்த்தி நாக அர்ஜுனா மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு ரூமுக்குள் சென்ற போது தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இவர் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி இறந்தார்.இவரது இறப்பிற்குப் பின்னர் இவருடைய மகளை நடிகை ஊர்வசி தான் வளர்த்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement