• Dec 27 2024

விஜயா செய்த கள்ள வேலை.. வாயை கொடுத்து புண்ணாக்கிய ரோகிணி! முத்து கொடுத்த பதிலடி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், விஜயா தனது நகையை கொடுத்து மனோஜ் அடகு வைத்த மீனாவின் நகைகளை மீட்குமாறு சொல்ல, மனோஜ் உடனே அடகு வைத்த நகை கடைக்காரருக்கு போன் பண்ணுகிறார். ஆனால் விற்ற நகையெல்லாம் டெட் பாடி மாதிரி. இப்போ தங்க கட்டி தான் இருக்கு வேணுமா என ஷாக் கொடுக்கிறார்.

இதனால் விஜயாவிடம் இந்த விஷயத்தை சொல்ல, அவர் மனோஜை கூப்பிட்டு அரைந்து விடுகிறார். அதன் பின்பு தான் நகையை கூட பார்த்ததில்லை என்று புலம்ப, மனோஜ் நான் போட்டோ எடுத்து வச்சிருக்கேன் என்று சொல்லி கவரிங் நகையை வைத்து சமாளிக்க முடிவெடுக்கிறார்கள்.

மறுபக்கம் முத்து சாப்பிடும் போது சாப்பாட்டில் முடி வருகின்றது என்று சொல்ல,  அது என்னுடைய முடி தான் என்று மீனா சொல்லுகிறார். மேலும் முடி இருந்தால் உறவு நீளும் என்று சொல்ல, அதற்கு முத்து இல்ல எனக்கு பெருசா பிரச்சனை வரும் என்று தானே சொல்லி இருக்காங்க என்று சொன்னதும் ரோகிணி பயப்படுகிறார்.

இதை தொடர்ந்து மனோஜ், விஜயா வீட்டுக்கு வர ரெண்டு பேரும் ஒன்னா தான் வெளியே போனீங்களா என ரோகினி கேட்கின்றார். அதற்கு மனோஜ் இல்லை நான் ஏஜெண்டை பார்க்கப் போனேன், அம்மாவ வாசல்ல தான் பார்த்தேன் என பொய் சொல்லுகிறார்.


அதன்பின்பு அண்ணாமலை மீனா கொடுத்த நகையை கொண்டு வந்து கொடுக்குமாறு சொல்ல, அது இப்போ எதுக்கு என விஜயா  கேட்கின்றார். ரோகினையும் நகை போட மாட்டேன் என சபதம் போட்டிங்களே?  இப்போ சபதத்தை வாபஸ் வாங்க போறீங்களா? என்று நக்கலாக பேச, உங்க அப்பா வீட்டு நகைய நாங்க கேட்கவில்லை என முத்து பதிலடி கொடுக்கிறார்.

விஜயாவும் உன் சபதம் என்னாச்சு என கேட்க, இப்ப நக இருக்கா இல்லையா? என்று முத்து கேட்க விஜயா அதிர்ச்சி அடைகின்றார். மனோஜூம் திருத்திருவேன முழிக்கிறார். மேலும் இந்த வீட்டில் தான் நக அடிக்கடி காணாமல் போகுமே. 27 லட்சத்தை தூக்கிட்டு போனவன் தானே. ஏதாவது பண்ணிட்டானோ என சந்தேகத்தோட கேட்க, மனோஜ் அந்த நகையை எடுத்து இவன் முகத்தில தூக்கி எறிங்க என்று சொல்லுகிறார்.

அதன் பின்பு விஜயா அந்த நகையை கொண்டு வந்து கொடுக்க, மீனா அதை திருப்பித் திருப்பிப் பார்க்கின்றார். அதற்கு உன்ட நக  அப்படியே தான் இருக்கு என விஜயா சொல்லுகிறார்.

இறுதியாக மீனாவும், முத்துவும் நக கடைக்கு சென்று ரெட்டை வட செயின் பார்க்கணும் என்று சொல்லி, தமது நகையை கொடுக்க அது கவரிங் நகை என தெரிய வருகின்றது. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement