• Dec 26 2024

விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த தவறிய குற்றவுணர்ச்சி! மதுவில் மூழ்கிய வடிவேலு?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்தது இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பிரிவை எண்ணி விஜயகாந்தின் குடும்பம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் நாடுமே கேப்டன் இல்லாமல் தவிக்கின்றது.

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் பலர் அஞ்சலி செலுத்த வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு அதிலும் முக்கியமாக காமெடி நடிகர் வடிவேலு வரவில்லை என்பதோடு, இதுவரையில் ஒரு இரங்கல் செய்தி கூட பகிரவில்லை என ரசிகர்களால் திட்டித் தீர்க்கப்பட்டார்.


இந்நிலையில், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த முடியாத குற்றவுணர்ச்சியில் வடிவேலு மதுவுக்கு அடிமையாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, வடிவேலுக்கு மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என விருப்பம் இருந்ததாம். ஆனால், நேரில் சென்றிருந்தால் விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என வடிவேலு பயந்துவிட்டாராம். 

இவ்வாறு விஜயகாந்த் போன்ற மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் போனதை நினைத்து வீட்டுக்குள்ளேயே முடங்கிய வடிவேலு,தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு விஜயகாந்தை நினைத்து புலம்பி வருகிறாராம்.  

Advertisement

Advertisement