• Dec 25 2024

பிக் பாஸ் வீட்டில் குத்தாட்டம் போட்ட விசித்ரா! இதுவரை யாரும் பார்க்காத வைரல் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் விசித்ராவும் ஒருவராக காணப்படுகிறார். தற்போது இவர் விளையாடும் முறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அத்தோடு சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்குமளவுக்கு இவர் விளையாடி வரும் ஸ்ராட்டஜியும் நன்றாக உள்ளது.

தமிழ் திரையுலகில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை விசித்ரா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல், எங்க முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 


பிக் பாஸ் வீட்டில் 95 நாட்களைக் கடந்த போட்டியாளர்களுக்கு போட்டியாக தற்போது வரையில் விசித்ராவும் காணப்படுகிறார். இடையில் அவர் பணப்பெட்டியுடன் வெளியேறினார் என்ற செய்தி பரவிய போதிலும், அவர் அவ்வாறு செல்லவில்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் 'கொஞ்சும் நிலவும்..' பாடலுக்கு குத்தாட்டம் போட்டுட்டார் விசித்ரா. தற்போது குறித்த காணொளி வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement