• Dec 26 2024

பவன் கல்யாண் முதல் ராதிகா சரத்குமார் வரை.. தேர்தலில் வெற்றி பெற்றார்களா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணி கணிக்கப்பட்டு அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த தேர்தலில் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களும் போட்டியிட்டுள்ளார்கள். அதன்படி ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தற்போது மூன்றாவது முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளார்.

அதேபோல நடிகர் பவன்கல்யாண் எம்எல்ஏ தேர்தலில் 70000 வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். அவரது ஜனசேனா கட்சியும் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதாம்.


நடிகை கங்கனா ரணாவத் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில், அவரும் அதிக வாக்குகளை பெற்று ஜெயித்துக் காட்டியுள்ளார். தற்போது அவர் தனது அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.


மேலும் மலையாள நடிகரான சுரேஷ் கோபி கேரளாவில் நடைபெற்ற எம்பி தேர்தலில் முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றியும் கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது.

இதேவேளை,  விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement