• Dec 26 2024

கோபி கேட்ட ஒரே ஒரு கேள்வி.. வெளியே துரத்தியடித்த பாக்கியா! கோபத்தில் பழனி அக்கா

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியாவிடம் சென்ற கோபி, உனக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணமா? அவங்க அக்கா முகத்துக்கு நேரா வந்து சொல்லுறாங்க என்று பாக்கியாவை அவமானப்படுத்தி பேசுகிறார். மேலும் நீ என்ன வேணா பண்ணிட்டு போ.. ஆனால் என் பொண்ண எதுக்கு விமால் கூட பேச விடுறா என் பொண்ணுக்கு ஏதாவது ஒன்னு என்றால் தொலைச்சிடுவேன் என்று பேசுகிறார்.

கோபி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்க, போதும் நிறுத்துங்க. நீங்க சொல்ற எதுவுமே நடக்காது. உங்களுக்கு எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லனும் எனக்கு எந்த அவசியமும் இல்லை. வெளியே போங்க என்று கோபியை துரத்துகிறார்.

இதைத்தொடர்ந்து பாக்கியா பழனியின் வீட்டுக்குப் போக, அங்கு அவரது அக்கா விஷயத்தை உடைக்கின்றார். மேலும் கல்யாணத்தைப் பற்றி நேரடியாக பேச, பாக்கிய அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் என் மனசுல கொஞ்சம் கூட அப்படி ஒரு எண்ணம் கிடையாது நீங்க பழனி சார் கிட்ட பேசி இருந்தா என்கிட்ட பேச வேண்டியது இருக்காது இந்த பேச்சை இதோட விட்டுடுங்க என்று சொல்லுகிறார்.


இதனால் சுந்தரி கோபத்தில் ரூமுக்கு சென்று விட, அவ  மனசுல பட்டத கேட்டுட்டா இந்த விஷயம் பழனிக்கு கூட தெரியாது. அவரை நீ தப்பா நினைக்காத என்று சொல்ல, பாக்கியா அங்கிருந்து கிளம்பி வருகின்றார்.

மேலும் இந்த விஷயம் பற்றி இப்பவே பழனியிடம் பேசி முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து வந்து பாக்கியா அங்கே நிற்க, பழனியும் வந்து என்ன மேடம் என்று பேச்சு கொடுக்கிறார்.

இதனால் சூப்பர் மார்க்கெட்டில் பில் கொஞ்சம் தப்பா இருக்கு அதை இப்ப போலாமா? பிறகு போகலாமா என யோசித்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்ல, நானும் அங்க தான் போறேன் வாங்க என போகிறார்கள். காரில் செல்லும்போது உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று பாக்கியா சொல்லுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement