• Dec 26 2024

நரிக்குறவப் பெண்ணாக நடிக்கும் ஹன்சிகா! என்ன படம் தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை ஹன்சிகா.

அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்ட ஹன்சிகா பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஹன்சிகாவின் 50வது படமாக 'மஹா' திரைப்படம் அமைந்தது.

மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் தயாரிப்பாளர் கண்ணன் தயாரித்து இயக்க, நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் தான் 'காந்தாரி'.  


இந்த திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் ஏப்ரல் மாத விடுமுறையில் வெளி வர உள்ளதாம்.

இந்து அறநிலைத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண் பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய கந்தர்வகோட்டை ஆராய செல்கிறார். பொக்கிஷங்களை தேடி  செல்லும் அவருக்கு அங்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. 

பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில் இப்படம் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடிகை ஹன்சிகா இப்படத்தில் முதல்முறையாக இந்து அறநிலைத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவர் வேடம் என ரெட்டை வேடத்தில் நடிக்கிறார்.

அவர் நரிக்குறவர் பெண்ணாக நடிப்பதற்காக சில பயிற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளார். 

அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவரது நடிப்பற்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement