• Dec 27 2024

சிவாஜி போல நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென பிரிந்த உயிர்.! நெஞ்சை உலுக்கும் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக என்றென்றைக்கும் திகழ்பவர்தான் நடிகர் சிவாஜி கணேசன். அவரை பின்பற்றி இன்றுவரை பல நடிகர்கள் நடித்து வருகின்றார்கள். 

இந்த நிலையில், நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர்களுள் ஒருவரான சிங்கப்பூரை சேர்ந்த அசோகன் என்பவர் சிவாஜி கணேசன் போலவே நடை, உடை, பாவனைகளை கொண்டு பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு திடீரென உயிரிழந்துள்ளார்.

அதாவது சிவாஜி கணேசனின் வேடமணிந்து அவர் நடித்த படத்தின் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தபோதே பாடலின் முடிவில் திடீரென மயங்கி விழுந்தார். அங்கு சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இவருடைய மறைவினை பார்த்த ரசிகர்கள் பலரும் 'உயிர் வாழ்ந்த கடைசி நிமிடம் வரை மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கிய உண்மையான கலைஞர் சிவாஜி அசோகன், அவருடைய மறைவினை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது' என்று கூறி வருகின்றார்கள்.

மேலும் அவரது இறுதி சடங்குகள் இன்றைய தினம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நிகழ்ச்சியில்  சிவாஜி போல் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement