• Dec 25 2024

என்னை எப்படி பார்ப்பார்கள்? என தடுமாறும்போது திருமாவளவனின் பேச்சு தான் எனக்கு வலிமை! மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள் திரைபடத்தின் மூலம் திரை உலகத்திற்க்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். 

முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அதனைத் தொடர்ந்து இவரின் கர்ணன், மாமன்னன் திரைப்படமும் அடுத்தடுத்து வெற்றியை சந்தித்தது. 

இந்த நிலையில், என்னுடைய கதையை திரைப்படமாக்க தடுமாறும்போது, திருமா அண்ணன் பேசிய வீடியோக்களை பார்ப்பேன் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், என்னுடைய கதையை படமாக்குவதற்கு முந்தைய நாளில், அந்த காட்சி வெளியானால் என்னை எப்படி பார்ப்பார்கள்? எந்த மாதிரியான விமர்சனங்கள் வரும்? என எல்லாத்தையும் யோசித்து தடுமாறும்போது, அண்ணன் திருமாவளவன் பேசிய வீடியோக்களை பார்ப்பேன்.

அதில் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய நிதானம் மற்றும் ஜனநாயகம் குறித்த பேச்சுகள் இருக்கும் வரும் தலைமுறைக்கு நிஜத்தையும் நம் வலிகளையும் கடத்துவதன் மூலம், இந்த சமூகத்தில் நுழைவதற்கு முன்பாக அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சமூகம் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என புரிந்துகொள்ள வேண்டிய கடமை எனக்கு இருக்கு, என நம்பிக்கை அளித்தது அண்ணன் திருமாவளவனின் பேச்சுகள்தான் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement