• Dec 27 2024

வேட்டையன் 1000 கோடி வரை வசூலில் கல்லா கட்டும்..! அடித்துக் கூறிய பிரபலம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம். இந்த திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. இதன் காரணத்தினால் தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக பல இடங்களிலும் இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில், வேட்டையன் படத்தை பற்றியும் அதன் வசூல் பற்றியும் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்

அதன்படி அவர் கூறுகையில், வேட்டையன் திரைப்படம் ஒரு கமர்ஷியல் என்டர்டைன்மெண்ட் படமாக உருவாக்கி உள்ளது. இந்த படத்தில் அனிருத் இரண்டு பாட்டுகளை பாடியுள்ளார். அதிலும் மனசிலாயோ பாடல் மிகவும் பிரபலம் ஆனது. அனிருத் - ரஜினிகாந்த் கூட்டணியில் இரண்டாவதாக உருவான திரைப்படம் தான் வேட்டையன்.

ரஜினிகாந்திற்கு ஏற்றப்படியே அனிருத்தும் அவரது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அழகாக மெட்டு போட்டுள்ளார். இதன் காரணத்தினால் தான் வேட்டையன் படத்தின் டிரைலர் எக்கச்சக்கமான வியூசுக்களை அள்ளியது. இதில் அரசியல் ஒரு துளியும் கலக்கவில்லை.



இந்த படத்தில் அமிர்தாபச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத்  பாசில் என பலரும் நடித்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. உலக அளவில் இந்த படம் 5000  தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாம்.

மேலும், 400 கோடி ரூபாய் வசூலை படம் வெளியாவதற்கு முன்பே கலெக்சன் ஆகிவிட்டதான். இதனை தயாரிப்பு நிறுவனம் பெருமையாக கூறியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே நானூறு கோடினா ஈசியா ஆயிரம் கோடியை தாண்டும் என்பது தான் அர்த்தம்.

ஜெயலர் 800 கோடி வரை வசூலித்தது. இதனை வேட்டையன் படம் முந்தும். ரஜினி படத்தை ரஜினி படம் தான் வசூலில் முறையடிக்கும். அந்த அடிப்படையில் வேட்டையன் வசூல் சாதனை செய்வது உறுதி. துபாயில் ரஜினி ரசிகர்கள் நிறைய பேர் உள்ளாங்க. அதனால அங்கு பட ப்ரோமோஷன் விழா நடைபெறுகின்றது. இந்த படத்தில் என்கவுண்டரை வித்தியாசமான முறையில் எடுத்துள்ளார் இயக்குனர் என்று தெரிவித்துள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement